தோஹா ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் பாரிய வெடிபு - உறுதி செய்தது கத்தார் உள்துறை அமைச்சகம்!

ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கடந்த இரவு (21 ஜூன் 2026, ஞாயிற்றுக்கிழமை) ஒரு உள்நாட்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதை கத்தார் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் எந்தவொரு எரிவாயு கசிவும் ஏற்படவில்லைஎன்றும் அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கத்தாரின் சிவில் டிஃபென்ஸ் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கையாண்டு வருகின்றனர்.
தற்போது நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட பலத்த சத்தம் தலைநகர் தோஹா வரை கேட்டதாகப் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், அது இந்தத் தொழில்நுட்ப விபத்தினால் ஏற்பட்டதுதான் என்பதை உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது




