உக்ரைனிடம் நீண்ட தூர ட்ரோன்கள் - 2,000 கிலோமீட்டர் கடந்து ரஷ்யாவில் தாக்குதல்!

உக்ரைனின் நீண்ட தூர ட்ரோன்கள், ரஷ்யாவின் மேற்கு சைபீரியாவில் உள்ள ட்யூமென் (அன்டிபின்ஸ்கி) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுத்திகரிப்பு நிலையம் உக்ரைன் எல்லையிலிருந்து 2,000 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் அமைந்துள்ளது.
இதேனேரம் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy, இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன், உக்ரைன் தற்போது 3,000 கிலோமீட்டருக்கும் மேல் பறக்கக்கூடிய புதிய நீண்ட தூர ட்ரோன்களை வெற்றிகரமாக பயன்படுத்தி வருவதாக கூறினார்.
ரஷ்ய அதிகாரிகள், ட்ரோன் தாக்குதல் தடுக்கப்பட்டதாகவும், ஆரம்ப தகவல்களின் படி சுத்திகரிப்பு நிலையத்திற்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எனினும், சமூக ஊடகங்களில் வெளியான சில காணொளிகளில் அந்தப் பகுதியில் புகை மற்றும் தீப்பற்றிய காட்சிகள் காணப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த தாக்குதல், உக்ரைனின் ட்ரோன் திறன் ரஷ்யாவின் உள்பகுதிகளிலுள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் எட்டும் அளவுக்கு வளர்ந்திருப்பதை காட்டும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.




