அமெரிக்கா செய்வது வரலாற்றில் ஒரு 'கறுப்புப் புள்ளி' - ஈரான் கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்!

கால்பந்து தொடரில் தங்களது தேசிய அணிக்கு வழங்கப்பட்டு வரும் நடைமுறைகள் வரலாற்றில் ஒரு 'கறுப்புப் புள்ளி' என ஈரான் கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஹெதாயத் மொம்பெய்னி (Hedayat Mombeyni) தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் முகாமிட்டுள்ள ஈரான் அணி, ஞாயிற்றுக்கிழமை லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெல்ஜியத்துடன் மோதவுள்ளது.
உள்ளூர் நேரப்படி போட்டி நண்பகலில் ஆரம்பமாவதால், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அமெரிக்கா செல்ல அனுமதி கோரியிருந்தது.
எனினும், போட்டி ஏற்பாட்டாளர்கள் அதற்கு அனுமதி மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்தங்களையும் விதிகளையும் இவ்வாறு மீறுவது கால்பந்து விளையாட்டையே கேள்விக்குள்ளாக்குவதாகஹெதாயத் மொம்பெய்னி ஊடகங்களிடம் சாடியுள்ளார்.
இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள வெள்ளை மாளிகையின் கால்பந்து பணிக்குழுத் தலைவர் ஆண்ட்ரூ கியுலியானி (Andrew Giuliani), போட்டிக்கு முந்தைய நாள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து ஈரானுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.




