அமெரிக்கா - ஈரான் இடையிலான பிராந்திய அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்ஸ்லாந்தில் மீண்டும் ஆரம்பம்!

லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை அடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பிராந்திய அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்ஸ்லாந்தில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் சுவிஸ் நோக்கிப் பயணமாகியுள்ளனர்.
இருதரப்பும் அண்மையில் கையெழுத்திட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரங்களுக்கு 60 நாட்களுக்குள் நிரந்தரத் தீர்வுகாண இந்த தொழில்நுட்ப பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
அத்துடன், அமெரிக்கா மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் லெபனானில் வெள்ளிக்கிழமை மாலை முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. எனினும், தெற்கு லெபனானில் உள்ள பாதுகாப்பு மண்டலத்திலிருந்து தமது படைகள் விலகாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜூன் 23 முதல் 25 வரை வொஷிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்தும் அமெரிக்கா ஆலோசித்து வருகின்றது.
கடந்த பெப்ரவரி 28 இல் ஆரம்பமான அமெரிக்க - ஈரான் போரினால் உலகளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்திருந்த நிலையில், இந்த லெபனான் போர்நிறுத்த அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இந்த வாரத்தில் சுமார் 8 சதவீத வீழ்ச்சியைக் காட்டியுள்ளது




