அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான ராஜதந்திர உறவுகளில் விரிசல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் சிக்லி (Amichai Chikli) வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டு தற்போது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
டிரம்ப் மீது "நலன்களின் முரண்பாடு" (Conflict of Interest) இருப்பதாக அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை -
"கத்தார், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் டொனால்ட் டிரம்ப் மீது மிகவும் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளன.
குறிப்பாக கத்தார், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் விவகாரங்களில் டிரம்பிற்கு ஒரு கண்மூடித்தனமான பார்வை (Blind spot) உள்ளது. அவர் பணத்தால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றே நான் நினைக்கிறேன்."
பண பலத்தின் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் சில நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதாக இஸ்ரேலிய அமைச்சர் தரப்பிலிருந்து வந்துள்ள இந்த விமர்சனம், அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான ராஜதந்திர உறவுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




