கொலை தீர்வாகாது - நிதர்சனத்தை இஸ்ரேல் புரிந்துகொள்ள வேண்டும் - அமெரிக்கத் துணை அதிபர்!

தத்தமது பாதுகாப்புக்காக எல்லோரையும் கொலை செய்வது மட்டுமே தீர்வாகாது, நிதர்சனத்தை இஸ்ரேல் புரிந்து கொள்ள வேண்டும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் லெபனான் விவகாரத்தில் இஸ்ரேல் எல்லை மீறக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதே நேரம் இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரே பலமிக்க தலைவர் ட்ரம்ப் மட்டுமே. இஸ்ரேலின் ஆயுதங்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் உருவானவை என்றும் அவர் இஸ்ரேலுக்கு நினைவூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது




