SuperTopAds

ஈரான்- அமெரிக்க ஒப்பந்தங்கள் தொடர்பில் சில பொய்யான தகவல் - ட்ரம்ப்!

ஆசிரியர் - Editor IV
ஈரான்- அமெரிக்க ஒப்பந்தங்கள் தொடர்பில் சில பொய்யான தகவல் - ட்ரம்ப்!

ஈரான்- அமெரிக்காவுக்கு இடையே கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் சில பொய்யான தகவல் வருகின்றன.

இந்த தகவலை உறுதிப்படுத்த ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக பிரான்ஸில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதில் ஈரான் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் நேரில் உங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை வாசித்துக் காட்டுவேன்.

அப்போதுதான் ஊடகங்கள் அதைத் துல்லியமாகச் செய்தியாக்கும். ஏனெனில் அது ஒரு மிக முக்கியமான ஆவணம்.

மேலும், ஒரு பயங்கரமான JCPOA ஒப்பந்தத்தின் மூலம் மத்திய கிழக்கை அழித்திருக்கக்கூடிய ஒபாமாவைப் போலல்லாமல் இது இருக்கும்.

ஈரானுக்கு ஒரு பைசா கூட அமெரிக்க டொலர்கள் செல்லாது மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் வழங்கவுள்ளதாக வெளியான செய்தி என்பது முற்றிலும் ஒரு பொய். இது வதந்தியாக பரவியுள்ளது.

நாங்கள் ஈரானில் எந்தப் பணத்தையும் முதலீடு செய்யப் போவதில்லை. முதலீடு செய்ய எங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் போரை டிரம்ப் பகிரங்கமாகக் கண்டித்துள்ளார்.

"இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுடன் மிக நீண்ட காலமாகப் போரிட்டு வருகிறது, இதனால் ஏராளமான மக்கள் கொல்லப்படுகிறார்கள்." பொதுமக்கள் நிறைந்த அடுக்குமாடிக் கட்டிடங்களை அழிக்கும் தாக்குதல்களைத் தாம் எதிர்ப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

Radio