SuperTopAds

கையெழுத்தானது ஒப்பந்தம் - ஹோர்மூஸ் நீரிணையும் மீண்டும் திறக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

ஆசிரியர் - Editor IV
கையெழுத்தானது ஒப்பந்தம் - ஹோர்மூஸ் நீரிணையும் மீண்டும் திறக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முழுமையாகக் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், உலகின் முக்கிய கடல் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே பகுதியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் முழுமையாகக் கையெழுத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகளாவிய எண்ணெய் மற்றும் வர்த்தக போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை, ஏற்கனவே பகுதியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை சர்வதேச எரிசக்தி சந்தைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா - ஈரான் உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த பதற்றத்தை தணிக்கும் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

Radio