SuperTopAds

அமெரிக்க தடுப்பு மையங்களில் கைதிகளின் மரண விகிதம் இருமடங்கு அதிகரிப்பு - வெளியானது அதிர்ச்சி தகவல்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க தடுப்பு மையங்களில் கைதிகளின் மரண விகிதம் இருமடங்கு அதிகரிப்பு - வெளியானது அதிர்ச்சி தகவல்!

அமெரிக்கக் குடிவரவு மற்றும் குடியகல்வு அமலாக்கப் பிரிவின் (ICE) தடுப்பு மையங்களில் உள்ள கைதிகளின் மரண விகிதம் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2025 ஜனவரியில் தனது தீவிரமான அகதிகள் வெளியேற்றப் பிரச்சாரத்தைத் தொடங்கியதிலிருந்து இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் கடந்த 2009 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் சராசரியாக 3848 கைதிகளுக்கு ஒரு மரணம் என்ற அளவில் இருந்த விகிதம், ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு 1630 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் மிக மோசமாக அதிகரித்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தடுப்பு மையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரியில் 70,000 ஆக உயர்ந்த நிலையில், ஜூன் மாத தொடக்க நிலவரப்படி சுமார் 50 பேர் இந்த முகாம்களில் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்கள் குறித்து ஆய்வு செய்த மருத்துவ வல்லுநர்கள், முகாம்களில் வழங்கப்படும் மருத்துவக் கவனிப்பு மற்றும் கண்காணிப்பு மிகவும் மோசமாக உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 21 பேர் சுயநினைவற்ற நிலையிலோ அல்லது இறந்த பின்னரோதான் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளனர்.

Radio