ஈரான் மீதான போரின் விளைவு - அமெரிக்காவின் பெட்ரோலிய இருப்பு என்றும் இல்லாதளவு குறைந்த அளவை எட்டியது!

ஈரான் மீதான போரின் விளைவாக அமெரிக்காவின் மூலோபாய பெட்ரோலிய இருப்பு (SPR) 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடுமையான தடைகளையும் தட்டுப்பாட்டையும் உருவாக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்




