SuperTopAds

29 சிசுக்களின் சடலங்கள் வீட்டில் மறைத்துவைப்பு - பெண் மருத்துவர் கைது!

ஆசிரியர் - Editor IV
29 சிசுக்களின் சடலங்கள் வீட்டில் மறைத்துவைப்பு - பெண் மருத்துவர் கைது!

போலந்தில் 57 வயதான மக்தலேனா (Magdalena) என்ற பெண் மருத்துவர், தனது வீட்டின் தோட்டத்தில் 29 சிசுக்களின் சடலங்களை மறைத்து வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுமான ஊழியர்கள் வீட்டின் வாகனப் பாதையைத் தோண்டியபோது, அங்கிருந்த மருத்துவக் கழிவுகளும் சடலங்களும் வெளிச்சத்திற்கு வந்தன.

பொலிஸார் மற்றும் மருத்துவ நிபுணர்கள் நடத்திய சோதனையில், கண்டெடுக்கப்பட்டது சிசுக்களின் சடலங்கள் என்பது உறுதிபொலிஸார் மற்றும் மருத்துவ நிபுணர்கள் நடத்திய சோதனையில், கண்டெடுக்கப்பட்டது சிசுக்களின் சடலங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவர் மக்தலேனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை வாங்கியுள்ளார். சமீபத்தில்தான் அதனை ஒரு தம்பதிக்கு விற்றுள்ளார்.

சடலங்களை முறையாக அப்புறப்படுத்த ஆகும் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, அவர் அவற்றை வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Radio