ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் - கடும் நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர்!

ஈரானுக்கு எதிரான போர் மற்றும் லெபனானில் நடந்து வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்த தனது அரசின் முடிவுகளைப் இஸ்ரேலிய பிரதமர் செய்தியாளர் சந்திப்பில், பாதுகாத்துப் பேசினார்.
ஈரானுக்கு எதிரான தாக்குதலை சரியான நேரத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை என்றால், அதனால் விளையக்கூடிய ஆபத்துகள் கட்டுக்கடங்காமல் போயிருக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் குறிப்பிட்டார்.
ஈரானுடன் மட்டுமின்றி, லெபனான், சிரியா மற்றும் காஸா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளை அவர் நியாயப்படுத்தினார்.
தனது அரசின் இந்த செயல்பாடுகள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மிக அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஈரானுக்கு எதிரான போரையோ அல்லது லெபனானில் நடந்து வரும் தாக்குதல்களையோ இஸ்ரேல் நிறுத்தக்கூடாது என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இந்த செய்தியாளர் சந்திப்பு மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது.
தனது அரசு ஈட்டியுள்ள வெற்றிகளை சிலர் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.




