SuperTopAds

நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் கோர விபத்து - பிரபல பாடகர் உட்பட 6 பேர் பலி!

ஆசிரியர் - Editor IV
நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் கோர விபத்து - பிரபல பாடகர் உட்பட 6 பேர் பலி!

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நிகழ்ந்த கோரமான ஹெலிகாப்டர் விபத்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரியோ டி ஜெனிரோவின் மேற்கு புறநகர்ப் பகுதியான ரெக்ரியோ டோஸ் பான்டெய்ரான்டெஸ் (Recreio dos Bandeirantes) என்ற இடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் அமெரிக்காவின் பிரபல ஆல்ட்-பாப் பாடகரும், இணையப் பிரபலமுமான ஆலிவர் ட்ரீ (Oliver Tree) உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோதிய ஹெலிகாப்டர்கள் அங்கிருந்த மின்சார கார்கள் நிறுத்தும் இடத்தில் (Electric car parking) விழுந்தன. இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த 20 கார்களும் தீக்கிரையாகியுள்ளன.

உயிரிழந்தவர்களின் உடல்களை இன்னும் முறையாக அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரேசில் நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Radio