தொழுகையே முதன்மையானது - செனகல் பயிற்சியாளர்!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பில், செனகல் கால்பந்து அணியின் பயிற்சியாளர் பேப் தியாவ் (Pape Thiaw) பேசிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
நியூ ஜெர்சியில் பலத்த காற்று வீசியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக வீரர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், தங்களது தொழுகையை நிறைவேற்றுவதற்காக அணி வீரர்கள் வெளியே சென்றனர்.
இதனைக் குறிப்பிட்ட செய்தியாளர் ஒருவர், "பாதுகாப்பு எச்சரிக்கையை மீறி ஏன் வெளியே சென்றீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பயிற்சியாளர் பேப் தியாவ் அளித்த அதிரடி பதில் இதோ:
"தொழுகையை விட முக்கியமான ஒன்று உலகில் இருக்கிறதா? நீங்கள் காற்றைக் கண்டு பயப்படுகிறீர்கள், ஆனால் நாங்களோ அந்த காற்றைப் படைத்த இறைவனுக்குப் பயப்படுகிறோம். நாம் இங்கு விளையாட வந்திருக்கலாம், ஆனால் நாம் இறைவனை வணங்கவே படைக்கப்பட்டோம் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.




