SuperTopAds

திறக்கப்படும் ஹோர்முஸ் நீரிணை - மசகு எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி!

ஆசிரியர் - Editor IV
திறக்கப்படும் ஹோர்முஸ் நீரிணை - மசகு எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி!

100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 3.55% சரிந்து ஒரு பீப்பாய் 83.77 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் 4.10% சரிந்து 80.78 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரினால் கடந்த மே மாதம் மசகு எண்ணெய் விலை உச்சம் தொட்டிருந்தது.

Radio