ஈரானை புறக்கணித்து உருவாக்கப்படும் எந்தவொரு புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமைபெறாது- அராக்சி!

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஈரானை புறக்கணித்துவிட்டு உருவாக்கப்படும் எந்தவொரு புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் நிச்சயம் தோல்வியடையும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.
பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று தெஹ்ரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.




