SuperTopAds

அமெரிக்கா - ஈரான் சமாதான உடன்படிக்கை - தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்த முகிய இரு நாடுகள்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கா - ஈரான் சமாதான உடன்படிக்கை - தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்த முகிய இரு நாடுகள்!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து, கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி மூலம் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

கட்டார் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, குவைத் வெளிவிவகார அமைச்சர் ஷேக் ஜர்ரா ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபாவுடன் இந்த தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக கட்டார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த உரையாடலின் போது, வொஷிங்டன் மற்றும் டெஹ்ரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலுவையிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்தாகும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே தீர்க்கப்படாமல் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகள் மூலம் தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட்டு வரும் பாராட்டத்தக்க முயற்சிகளுக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாக இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்டார் வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Radio