ஈரானின் டிரோன்களை மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

ஈரானுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டது, மாபெரும் வெற்றி என்று நேற்றையதினம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் டிரோன்களை அமெரிக்கப் படைகள் மீண்டும் சுட்டு வீழ்த்திய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் நேற்றிரவு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தைத் தடை செய்யும் நோக்கில், பல ஈரானிய 'டிரோன்கள்' ஏவப்பட்டதாக CENTCOM தனது 'X' தளப் பதிவில் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் இறுதியாகிறது என்று ட்ரம்ப் கூறிய நிலையில், ஈரானின் இந்தச் செயல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்து வந்த அந்த ஈரானிய டிரோன்கள் அனைத்தையும் அமெரிக்கக் கடற்படைப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்துச் சுட்டு வீழ்த்திவிட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் சம்மதித்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது நடந்த இந்த மோதலுக்குப் பிறகும், "ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து எவ்விதத் தடையுமின்றி தொடர்கிறது.
சர்வதேச வர்த்தகப் பாதை தொடர்ந்து திறந்தே உள்ளது," என்று CENTCOM உறுதியளித்துள்ளது




