SuperTopAds

பிஸ்கட் வாங்க சென்ற சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றம் - வர்த்தகர் கைது

ஆசிரியர் - Editor II
பிஸ்கட் வாங்க சென்ற சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றம் - வர்த்தகர் கைது

மாதம்பே பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 65 வயது வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்குச் சென்ற சிறுமியை, கடைக்குள் அழைத்துச் சென்று அவர் பாலியல் தொல்லை செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.