வட அயர்லாந்தின் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து பல பகுதிகளில் வன்முறை!

வட அயர்லாந்தின் Belfast நகரில் இடம்பெற்ற கொடூர கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன.
தாக்குதலில் 40 வயதுடைய ஒருவர் கண்கள், கழுத்து மற்றும் முதுகில் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொலை முயற்சி, கத்தி வைத்திருந்தது மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தாக்குதலைத் தொடர்ந்து Belfast மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் போராட்டங்கள் வன்முறையாக மாறின.
பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஒரு பேருந்து தீக்கிரையாக்கப்பட்டது. என காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டன.
பல குடும்பங்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
சில சமூகத் தலைவர்கள் மற்றும் மதகுருமார்கள், தாக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்த கறுப்பினக் குடும்பங்கள் இன அடிப்படையில் குறிவைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வட அயர்லாந்தின் முதல் அமைச்சர் Michelle O'Neill இந்த வன்முறையை "வெளிப்படையான ரவுடித்தனம்" எனக் கண்டித்துள்ளார்.
காவல்துறை தெரிவித்துள்ளதாவது, தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில் இந்த தாக்குதல் பயங்கரவாதச் சம்பவமாக கருதப்படவில்லை.




