லெபனானுக்காக இஸ்ரேலை தாக்கும் ஈரானிய படைகள்!

இஸ்ரேலுக்காக ஈரானை தாக்க அமெரிக்க படைகள் களமிறங்கியது போல் லெபனானுக்காக ஈரானிய படைகள் இஸ்ரேலை தாக்கியது.
மத்தியகிழக்கின் வரலாறுகளில் ஒரு நாட்டுக்காக இஸ்ரேலை இந்த அளவு தாக்குதல் நடித்திய ஒரே நாடு ஈரான் தான்.
லெபனானுக்கு ஆதரவான ஈரானின் இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் எந்த நாட்டின் மீதும் இனிமேல் ஆக்கிரமிப்பு அட்டூழியங்களை நிகழ்த்த அச்சமடையும் அளவுக்கு அமைந்திருந்தது.
ஈரானின் தாக்குதல் குறித்த செய்திகளை இஸ்ரேலிய ஊடகங்கள் மூடி மறைக்க நினைத்தாலும் தாக்குதலையும் அதன் மூலம் ஏற்ப்பட்ட சேத விபரங்களை சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களே உலகுக்கு காட்டிய வீடியோ ஆதாரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்கள் ஈரான் படைகளால் மட்டும் நிகழ்த்தப்படவில்லை ஹிஸ்புல்லாஹ் இராணுவம் மற்றும் ஹவுதிக்களும் இணைந்த மும்முனை தாக்குதலாகவே இது அமைந்திருந்தது.
இந்த கூட்டுத்தாக்குதல்கள் தான் இஸ்ரேலை திணற வைத்து அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளை கதற வைத்துள்ளது.
இந்த தாக்குதலுக்கான பதில் தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருந்த போதிலும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவும் ஹிஸ்புல்லாஹ் மற்றும் எமன் ஹவுதிக்களின் மிகப்பலமான எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாத இயலாமையின் காரணமாகவுமே இஸ்ரேல் படைகள் தற்காலிகமாக தம் பதில் தாக்குதலை இடைநிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உண்மையில் இஸ்ரேல் விவகாரத்தில் ஈரான் மிக சிறப்பாக ஹிஸ்புல்லாஹ் இராணுவத்தையும் எமன் ஹவுதி படைகளையும் வைத்து காய் நகர்த்தி வருவது தான் இஸ்ரேல் அமெரிக்க ஆதிக்க சக்திகளுக்கு தாங்கிங்கொள்ள முடியாத பின்னடைவை கொடுத்துள்ளது. இதனால் தான் ஈரான் லெபனான் விடையத்தில் விடாப்பிடியாக செயற்படுகிறது.
மேலும் இந்த நிலையில் இந்த சிக்கலான இராணுவ நகர்வுகளை சமாளிக்க முடியாத ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்கள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?
இந்த கேள்விக்கான விடை தான் உலகை பேரழிவை நோக்கி கொண்டு போகும் அணுவாயுத தாக்குதல் மேற்கொள்ள தூண்டும் விடையமாக பார்க்கப்படுகிறது.
இந்த பலமான இராணுவ கூட்டணியை உடைத்தால் மாத்திரமே இஸ்ரேல் தன் இருப்பை தக்கவைக்க முடியும்.
இதை உடைப்பதற்கான ஒரே வழி ஈரானை முற்றுமுழுதாக வீழ்த்துவது மாத்திரமே. அதை சாதாரண இராணுவ தாக்குதலின் மூலம் சாத்தியமாக்க முடியாது.
எனவே இஸ்ரேலின் அடுத்த நகர்வு அமெரிக்காவை கட்டுப்படுத்தி பேரழிவு தாக்குதலுக்கு இணங்க வைப்பது தான். இது தான் தற்போது இஸ்லேலால் நிகழ்த்த முடியுமான ஒரே செயல்.




