ஐக்கிய இராச்சியத்தின் துறைமுகத்தில் பாரிய தீ - 33 எஸ்யூவி ரக வாகனங்கள் தீக்கிரை!

ஐக்கிய இராச்சியத்தின் சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிக மதிப்புள்ள 33 ஹைப்ரிட் எஸ்யூவி ரக வாகனங்கள் தீக்கிரையாகின.
தீயணைப்பு வீரர்கள் ஜேகூ இ5 (Jaecoo E5) வாகனங்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கப் போராடியபோது, பல வெடிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, அதேவேளையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.




