கிடைக்கும் வாய்ப்பை தெஹ்ரான் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - பாகிஸ்தான் ராணுவத் தளபதி!

கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் பதற்றத்தை அதிகரிப்பதற்கு எதிராக தெஹ்ரானில் இருக்கும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் கோரிக்கைகள் குறித்த தனது நிலைப்பாட்டை கூடிய விரைவில் தெளிவுபடுத்துமாறு மொஹ்சின் நக்வி ஈரானை வலியுறுத்தினார்.
ஈரான் தலைமைக்கு அனுப்பப்பட்ட செய்தியில், ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான தற்போதைய வாய்ப்பை தெஹ்ரான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் வலியுறுத்தினார்.




