SuperTopAds

அமைதி காத்த அமெரிக்கா - வெளியுறவுக் கொள்கையிலும் மாறுதலை கான்பிக்குமா?

ஆசிரியர் - Editor IV
அமைதி காத்த அமெரிக்கா - வெளியுறவுக் கொள்கையிலும் மாறுதலை கான்பிக்குமா?

ஈரான் ஏவிய ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க அமெரிக்கா உதவியதாக இஸ்ரேலிய ராணுவம்  தெரிவித்திருந்த நிலையில், "நாங்கள் எந்தவொரு ஈரானிய ஏவுகணையையும் சுட்டு வீழ்த்தவில்லை!" என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் 'சிஎன்என்' (CNN) ஊடகத்திடம்  தெரிவித்து இஸ்ரேலின் கூற்றை அடியோடு மறுத்துள்ளார்.

அமெரிக்க அதிகாரி சிஎன்என்-க்கு அளித்த பிரத்யேகத் தகவலில் 7

ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் எதனையுமே அமெரிக்க ராணுவம் இடைமறிக்கவோ அல்லது சுட்டு வீழ்த்தவோ இல்லை என்று அந்த அமெரிக்க அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரி, "ஈரானின் ஏவுகணைகளை வான்வெளியிலேயே இடைமறித்து இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உதவியது" என்று கூறியிருந்தார். ஆனால், அமெரிக்காவின் இந்த புதிய விளக்கம் இஸ்ரேலின் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பு ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்த மோதல்களின் போதெல்லாம், இஸ்ரேலைக் காப்பதற்காகத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி அமெரிக்கா கணிசமான ஈரானிய ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியது. ஆனால், இந்த முறை எந்தவொரு ஏவுகணையையும் இடைமறிக்காமல் அமெரிக்கா அமைதி காத்துள்ளது அதன் வெளியுறவுக் கொள்கையில் ஒரு "குறிப்பிடத்தக்க மாற்றம்" என்று கூறப்படுகிறது.

களத்தில் நேரடியாக இறங்கி ஏவுகணைகளை அழிக்காவிட்டாலும், அமெரிக்க மத்திய கட்டளையகத்துடன் நேற்றிரவு முழுமையான ஆலோசனைகள் நடைபெற்றதை அந்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர், CENTCOM தளபதி அட்மிரல் பிராட் கூப்பருடன் இரண்டு முறை பேசியுள்ளார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் "உடனடியாகத் தாக்குதலை நிறுத்துங்கள்" என்று உத்தரவிட்டும் இஸ்ரேல் ஈரானுக்குள் தாக்குதல் நடத்தியது. தற்போது இஸ்ரேல் தனது பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவியதாகக் கூறியதை அமெரிக்காவே வெளிப்படையாக மறுத்துள்ளது,

அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.

இஸ்ரேலைத் தனியாகப் போரிட விட்டுவிட்டு அமெரிக்கா ஒதுங்கிக் கொள்கிறதா என்ற மிகப்பெரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

Radio