SuperTopAds

இஸ்ரேலை ஆட்டம் காணவைத்த ஈரானின் "ஆபரேஷன் நஸ்ர்"!

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேலை ஆட்டம் காணவைத்த ஈரானின்

​இஸ்ரேலின் முக்கிய இராணுவ இலக்குகளான நெவாடிம்  மற்றும் டெல் நோஃப் விமானத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் பின்னணியில் உள்ள  தற்போது பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

​ஈரான் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் "ஆபரேஷன் நஸ்ர்" (Operation Nasr) எனப் பெயரிட்டுள்ளது. "நஸ்ர்" என்றால் "வெற்றி" என்று பொருள்படும்.

மேலும், தங்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த '12 நாள் போர்' தியாகிகளுக்கு இத்தாக்குதலை ஈரான் அர்ப்பணித்துள்ளது.

​ஈரானின் அதிநவீன ஐ.ஆர்.ஜி.சி (IRGC) விண்வெளிப் படையினரால் இந்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுதாக்குதலைத் தொடங்கும் போது "ஓ ஹைதர் அல்-கர்ரார்" (O Haidar al-Karrar) என்ற புனிதக் குறியீட்டு வாசகம் முழங்கப்பட்டுள்ளது.

​போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காமல், மீண்டும் மீண்டும் எதிரிகளை நோக்கிப் பாயும் அச்சமற்ற மாவீரராகக் கருதப்படும் இமாம் அலியின் நினைவாகவே இந்த வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எதிரிகளுக்கு தங்களின் சமரசமற்ற போர்க்குணத்தை உணர்த்தவே ஈரான் இந்தத் தாக்குதல் குறியீட்டைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது

Radio