ஈரானிய ஏவுகனைகளால் காவுகொள்ளப்படும் இஸ்ரேல் - பற்றி எரியும் இராணுவ தளங்கள் !

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் பேசப்பட்ட விடயங்களை புறக்கணித்து இன்ரேலிய படைகள் லெபனான் மீது தொடர் தாக்குதலை நடத்துவதை கண்டித்து வந்த ஈரான் கடந்த இரவு இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியுள்ளது.
இதை தொடர்ந்து இஸ்ரேல் அரசு தன் நாட்டு மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் இந்த தாக்குதலை தொடர்ந்து ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தமது வான்பரப்பை மிக அவசரமாக மூடியுள்ளதாக அறிவித்துள்ளன. ஆனாலும் மத்தியகிழக்கின் ஏனைய நாடுகள் எதுவும் வான்பரப்பை மூடியதாக இது வரை தகவல் இல்லை.
மேலும் இந்த தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் பதில் தாக்குதல் நடத்தாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அறிக்கையை நம்பியே அரேபிய நாடுகள் தமது வான் பரப்பை மூடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரான் ஒரு துளியும் அமெரிக்காவை நம்பி இனி பேச்சுவார்த்தை மேசைக்கு வர முடியாது என்று உறுதியாக மறுத்து கூறியுள்ள நிலையிலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து ஈரானுன் பேசி வருகிறோம் பேச்சுகளில் முன்னேற்றம் தெரிகிறது என்று அறிக்கை விட்டு யுத்தத்தில் இருந்து தப்பிக்க வழி தேடும் இந்த சூழ்நிலையில் யுத்தம் தான் வேண்டுமென்று அடம்பிடிக்கும் நெதன்யாகு ஈரானின் கோபத்தை தூண்டும் வகையில் லெபனானிலும் காஸாவிலும் இடம் பிடித்து கொடூரங்களை அரங்கேற்றி வருகிறார்.
கட்டுப்படுத்த முடியாத காட்டேரியாக மாறியுள்ள பெஞ்சமின் நெதன்யாகு தான் இன்று நடக்கும் யுத்தத்தின் முக்கிய காரணமென்பதால் இந்த யுத்தத்தை தற்காலிகமாகவேனும் நிறுத்த முடியாது ஏங்கும் அதிபர் ட்ரம்ப் இறுதியில் மொத்தமாகவே இஸ்ரேலிடம் அடிபணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை அடிபணிய வைப்பது தான் இஸ்ரேல் உளவுப்பிரிவின் முக்கிய நடவடிக்கையுமாகும்.
மேலும் இதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ உயர்மட்ட அதிகாரிகளை இஸ்ரேல் மொசாட் உளவுப்பிரிவு கண்காணித்து வருவதாகவும் இது ஈரான் போர் தொடர்பான அமெரிக்காவின் இட்டை நிலைப்பாட்டை சகிக்க முடியாத சியோனிச ஆட்சியாளர்களின் அமெரிக்கா மீதான அத்துமீறல் என்று அமெரிக்க ஊடகமொன்றில் அதிகாரி ஒருவர் தகல் வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் போர் தொடங்க வேண்டுமென்று விரும் இஸ்ரேலை பகைத்து அமெரிக்காவோ அல்லது அதன் நட்பு நாடுகளான அரபு நாடுகளோ எந்த வகையிலும் மத்தியகிழக்கில் அமைதியை ஏற்படுத்த முடியாது என்பதே யதார்த்தம்.
இப்போது நடத்தப்படுகின்ற தாக்குதலுக்கான பதிலடிகளை இஸ்ரேல் தம் நெருங்கிய நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தொடங்குவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. அவ்வாறு ஈரானுக்கெதிரான தாக்குதல்களை தொடங்க அமீரகமோ அல்லது ஏனைய அரபு நாடுகளோ அனுமதித்தால் நிச்சயம் நிரந்தரமான பிராந்திய போரொன்று ஏற்படுவதை எவரும் தவிர்க்க முடியாமல் போகும்.




