SuperTopAds

ராணுவத் தளங்கள், சொத்துக்கள் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் - ஈரான் எச்சரிக்கை !

ஆசிரியர் - Editor IV
ராணுவத் தளங்கள், சொத்துக்கள் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் - ஈரான் எச்சரிக்கை !

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளங்கள், சொத்துக்கள் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"லெபனான் விவகாரத்தில் இஸ்ரேல் ஒப்பந்தங்களை மீற அமெரிக்கா ஆதரவு வழங்கி வருகிறது.

எதிரிகள் சமாதானத்தை விரும்பாமல் அதிகாரத்தின் மொழியை மட்டுமே புரிந்து கொள்கின்றனர்.

எதிரிகளை தண்டிப்பதில் ஈரானிய படைகளின் கைகள் எப்போதும் ஓங்கியே இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Radio