இலங்கையின் தென் கடற்பரப்பருகில் பயணித்த இந்திய எரிபொருள் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

இலங்கையின் தென் கடற்பரப்புக்கு அருகில் பயணித்த இந்தியாவுக்குச் சொந்தமான எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களின்படி, இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கடற்படை கட்டளைப் பிரிவு மேற்கொண்டுள்ளது.
குறித்த கப்பல், சர்வதேச தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஈரான் எரிபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




