ஜூலை 1 முதல் பறக்கத் தயாராகும் ரியாத் ஏர் விமானம்!

சவுதி அரேபியாவின் புதிய சர்வதேச விமான நிறுவனமான 'ரியாத் ஏர்' (Riyadh Air) தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட அதன் முதல் இரண்டு போயிங் 787-9 ட்ரீம்லைனர் (Boeing 787-9 Dreamliner) பயணிகள் விமானங்கள் இன்று சவுதி மண்ணில் வந்திறங்கின.
இதன் மூலம், வரும் ஜூலை 1, 2026 முதல் தனது முதலாவது அதிகாரப்பூர்வ சர்வதேச வணிகப் பயணத்தை (Commercial Flight) ரியாத் ஏர் தொடங்கவுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த சொகுசு வசதிகளுடன் சவுதி அரேபியாவின் வான்வழிப் பயணத்தில் இது ஒரு புதிய மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது.




