ஈரானின் முடக்கப்பட்ட $`24 பில்லியன் சொத்துக்களை வளைகுடா நாடுகளுக்கு வழங்கத் திட்டமிடும் அமெரிக்கா!

ஈரான் அரசு அமெரிக்காவிடம் கோரி வரும் அதன் முடக்கப்பட்ட `$24 பில்லியன் டாலர் பணத்தைத் திரும்ப வழங்குவதற்குப் பதிலாக, அதை ஈரானால் பாதிக்கப்படும் வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புக்காகப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ஒரு புதிய அதிரடித் திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது.
சர்வதேச செய்தி நிறுவனமான 'ராய்ட்டர்ஸ்' (Reuters) அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானியத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய சேதங்களைக் துல்லியமாகக் கணக்கிடவும், அவற்றுக்கான பழுதுபார்ப்பு (Repairs) மற்றும் மீட்புச் செலவுகளை மதிப்பிடவும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ஈரானுடன் தொடர்புடைய கடந்தகால மற்றும் எதிர்காலப் போர் பாதிப்புகளுக்கு ஈடுகட்ட, சர்வதேச வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானியச் சொத்துக்களை நேரடியாகப் பயன்படுத்துவது குறித்து வாஷிங்டன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தங்களுக்குச் சேர வேண்டிய $24 பில்லியன் பணத்தைத் திரும்பப் பெறுவதில்தான் அமெரிக்காவுடனான ஒட்டுமொத்த அமைதி ஒப்பந்தமும் அடங்கியுள்ளது என்று டெஹ்ரான் (ஈரான்) கூறி வருகிறது.
ஆனால், அமெரிக்க கருவூலத்தின் (நிதியமைச்சகத்தின்) தற்போதைய திட்டம் என்னவென்றால், அந்தப் பணத்தை ஈரானின் தாக்குதல்களால் பாதிக்கப்படும் குவைத் மற்றும் பஹ்ரைன் போன்ற அண்டை வளைகுடா நாடுகளுக்குப் பிரித்து வழங்கத் தொடங்குவதுதான்.
இந்த உத்தியின் மூலம், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள விமான நிலைய முனையங்கள் (Airport Terminals), உள்கட்டமைப்புச் சேதங்கள், உயிரிழப்புகள் மற்றும் பழுதுபார்ப்புகள் என அனைத்திற்குமான செலவுகளும் ஈரானின் முடக்கப்பட்ட கணக்கிலிருந்தே நேரடியாகக் கழிக்கப்படும்.
இதன் விளைவாக, டெஹ்ரான் அதன் அண்டை நாடுகள் மீது வீசும் ஒவ்வொரு ஏவுகணையும், அது எதிர்காலத்தில் திரும்பப் பெற நினைக்கும் அதன் சொந்தச் சொத்தையே முற்றிலுமாகத் தானாகக் கரைக்கும் ஒரு இராஜதந்திரச் சுவராக்கியை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.




