SuperTopAds

சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்குவதில்தான் இஸ்ரேல் பலஸ்தீன தீர்வு உள்ளது - ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின்!

ஆசிரியர் - Editor IV
சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்குவதில்தான் இஸ்ரேல் பலஸ்தீன தீர்வு உள்ளது - ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின்!

இஸ்ரேல்–பாலஸ்தீன் மோதலுக்கு நிரந்தர தீர்வு என்பது முழுமையான இறையாண்மை கொண்ட சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்குவதில்தான் உள்ளது என்று ரஷ்ய அதிபர் விலாதிமிர் புடின்,

தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், சுயாட்சி கொண்ட பாலஸ்தீன அரசு உருவாகாமல் பிராந்தியத்தில் நிலையான அமைதி ஏற்பட முடியாது என்றும் புடின் வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் தனது நீண்டகால நிலைப்பாட்டை ரஷ்யா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த கருத்து சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Radio