உக்ரேன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் சந்திப்பு நடத்த சாத்தியம் இல்லை- ரஷ்ய ஜனாதிபதி புட்டின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் விரைவில் சந்திப்பு நடத்தும் சாத்தியத்தை நிராகரித்திருக்கிறார்.
அமைதி உடன்பாட்டின் அம்சங்களுக்கு இணக்கம் எட்டப்படும்வரை சந்திப்பதில் அர்த்தம் இல்லை என்று புட்டின் தெரிவித்தார்.
போர் இலக்குகளை முழுமையாக அடையும்வரையில் இராணுவ நடவடிக்கையைத் தொடரப்போவதாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து புட்டின் பலவீனமானவர் என்றும் அவர் மீண்டும் போரையே தேர்வுசெய்கிறார் என்றும் உக்ரேன் கூறியது.
முன்னதாக புட்டினுடன் நேரடிச் சந்திப்பு நடத்திப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.




