SuperTopAds

ஈரான் கால்பந்து அணிக்கு விசா வழங்கியது அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
ஈரான் கால்பந்து அணிக்கு விசா வழங்கியது அமெரிக்கா!

ஈரானின் உலகக் கிண்ணக் கால்பந்து அணியினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான விசாக்களைப் பெற்றுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்னும் 10 நாட்களில் ஈரானின் முதல் ஆட்டம் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவுள்ளது.

துருக்கியேவின் அங்காராவில் உள்ள தூதரகத்தில் இந்த விசா ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது போட்டிக்குத் தயாராக துருக்கியேவில் இருக்கும் ஈரானிய அணியினர், இன்று மெக்சிகோ செல்கின்றனர்.

போட்டி நடைபெறும் காலப்பகுதியில் அவர்கள் மெக்சிகோவிலேயே தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது

Radio