ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் உரையாடல்!

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான கலீல் அல்-ஹய்யாவுடன், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தொலைபேசி மூலம் உரையாடியதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலில் காசாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
சாதாரணமாக ஹமாஸ் இயக்க தலைவர்களுடன் உரையாடுவது வழமை. அவைகள் வெளியே பேசப்படுவதில்லை.
ஆனால் இந்த உரையாடல் பற்றி முக்கியத்துவம் கொடுத்து அறிக்கை வெளியிட்டதானது கவனிக்க வேண்டிய விடயமாகும்.




