SuperTopAds

நேருக்கு நேரான பேச்சுவார்த்தைக்குச் செல்லலாம் - ரஷ்யாவுக்கு தூதுவிடும் யுக்ரைன் ஜனாதிபதி!

ஆசிரியர் - Editor IV
நேருக்கு நேரான பேச்சுவார்த்தைக்குச் செல்லலாம் - ரஷ்யாவுக்கு தூதுவிடும் யுக்ரைன் ஜனாதிபதி!

"உங்கள் போர் எங்கள் நாட்டிற்கு கொண்டு வந்த அழிவுகளுக்குப் பிறகு, ரஷ்ய வீரர்களின் விதியைப் பற்றி நாங்கள் யுக்ரைனில் கவலைப்படுகிறோம் என்று அர்த்தமல்ல. ஆனால் எனக்கு யுக்ரைன் மக்கள் மீது அக்கறை உள்ளது.

நாங்கள் எங்கள் மக்களை இழந்து வருகிறோம், ஒவ்வொரு இழப்பும் நமக்கு வேதனையானது."

யுக்ரைனின் ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள், எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு மற்றும் போர்ச் சூழல் ஆகியவற்றால் ரஷ்ய மக்கள் சோர்வடைந்துள்ளதாக ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

"இந்தப் போரிலிருந்து வெளியேறும் பாதையைத் தேர்ந்தெடுக்கத் தயங்க வேண்டாம். இப்போது உங்களிடம் எதிர்பார்க்கப்படும் முக்கிய விஷயம் அதுதான்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா தற்போது "முழுமையாக ஈரான் விவகாரத்தில் கவனம் செலுத்தி வரும்" வேளையில், ஐரோப்பியப் போர் மீண்டும் அதன் கவனத்தின் மையப்புள்ளிக்கு வரும் வரை காத்திருப்பது தவறானது என்றும், சுவிட்சர்லாந்து அல்லது துருக்கி போன்றதொரு நாட்டில் இந்த நேருக்கு நேரான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்றும் யுக்ரைன் ஜனாதிபதி; முன்மொழிந்துள்ளார்.

சென் பீட்டர்ஸ்பேர்க்கில் பெரிய அளவிலான பொருளாதார மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே நாளில் தான் யுக்ரைன் ஜனாதிபதியின்; இந்தக் கடிதமும் வெளியாகியுள்ளது.

Radio