SuperTopAds

லெவோடோபி எரிமலை மீண்டும் வெடிப்பு - விமான நிலையம் மூடல்!

ஆசிரியர் - Editor IV
லெவோடோபி எரிமலை மீண்டும் வெடிப்பு - விமான நிலையம் மூடல்!

கிழக்கு இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள 'லெவோடோபி லாகி-லாகி' எரிமலை  வெள்ளிக்கிழமை மீண்டும் சக்திவாய்ந்த முறையில் வெடித்தது.

இதனால் வான்நோக்கி சுமார் 2.5 கி.மீ உயரத்திற்குச் சாம்பல் சீறிப்பாய்ந்ததை அடுத்து, 60 கி.மீ தொலைவிலுள்ள 'மௌமேரே' உள்ளூர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, 5 உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எரிமலைக்கான ஆபத்து எச்சரிக்கை இரண்டாவது மிக உயர்ந்த மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் சுற்றியுள்ள 5 கி.மீ பகுதிக்குள் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழையினால் 'லாகர்' எனப்படும் அபாயகரமான எரிமலைக் குழம்பு வெள்ளம் பாயக்கூடும் என்பதால் ஆற்றங்கரை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவில், கடந்த ஜூலை மாதமும் இந்த எரிமலை வெடிப்பால் பாலி சர்வதேச விமான நிலையத்தின் 24 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Radio