கியூஆர் இன்றி பெட்ரோல் நிரப்ப மறுத்த ஊழியரை தாக்கிய நபர் கைது

கொழும்பு - மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், ஊழியர் ஒருவரைத் தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 3 ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விசாரணையில், சந்தேக நபர் கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் பெற முயன்றுள்ளார்.
எனினும் தேவையான கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முடியாது என்று எரிபொருள் நிலைய ஊழியர் தெரிவித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து ஊழியரை குறித்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போலீசார் கோட்டை, மதிவெலவைச் சேர்ந்த 34 வயதான தாக்குதலாளியை கைது செய்தனர்
அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் பாதிக்கப்பட்ட ஊழியர் நீதிமன்றில் வழக்கு தொடர விரும்பவில்லை என தெரிவித்ததை அடுத்து தாக்குதலாளியை பொலிஸார் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்




