SuperTopAds

குவைத் சர்வதேச விமான நிலைய தாக்குதலுக்கு நாம் காரணமல்ல - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
குவைத் சர்வதேச விமான நிலைய தாக்குதலுக்கு நாம் காரணமல்ல - ஈரான்!

ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட  தாக்குதலுக்கு தாங்கள் காரணமல்ல என்று மறுத்துள்ளது.

விமான நிலைய முனையத்திற்கு ஏற்பட்ட சேதம், ஈரான் ஏவுகணைகளை இடைமறிக்க முயன்ற அமெரிக்க தயாரிப்பான 'பேட்ரியாட்' ஏவுகணை அமைப்பு தவறி விழுந்ததாலேயே ஏற்பட்டது என்று ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வாதத்தை அமெரிக்க ராணுவம் உடனடியாக நிராகரித்துள்ளது.

ஈரான் தான் வேண்டுமென்றே, திட்டமிட்டு குடிமக்கள் உள்கட்டமைப்பான விமான நிலையத்தின் மீது ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளது.

Radio