குவைத் விமான நிலையம் மீது தாக்குதல் - மன்சூர்அஹமட் பலி!

குவைத் விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஆசிய நாட்டை சேர்ந்த 54 வயது மன்சூர்அஹமட் என்பவரும் உயிரிழந்து சுமார் 17 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் ஈரானின் தாக்குதலுக்கு இலக்கான இதே கேற் (T1 Terminal) புனரமைக்கப்பட்டு நேற்று (02) திறந்து வைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஈரானிய தாக்குதலுக்கு இலக்காகி மறுபடியும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பலவற்றுக்கான ஆயத்தமும் குவைட்டிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் இங்கே நினைவூட்ட தகுந்தது.




