பெய்ரூட் மீது தாக்குதல் நடத்த நெதன்யாகு திட்டமிட்டம் - கடும் கோபத்துடன் திட்டிய அமெரிக்கா!

ஈரானுடனான பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் வகையில் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டதைக் கண்டித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடும் கோபத்துடன் பேசியதாக ஆக்சியோஸ் (Axios) செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த உரையாடலின் போது, நெதன்யாகுவின் செயல்பாடுகளைச் சாடிய டிரம்ப், அவர் ஒரு "கிறுக்கன்" என்றும், தனது உதவியின்றி அவர் சிறையில் இருந்திருப்பார் என்றும் காட்டமாகக் கூறியுள்ளார். தற்போது நெதன்யாகுவின் நடவடிக்கைகளால் அனைவரும் இஸ்ரேலை வெறுப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஏன் இவ்வாறான குழப்பமான செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என்று கோபமாகக் கேட்டுள்ளார்.




