ஆயத்துல்லா அலி காமெனியின் மறைவு - மூன்று நாள் அரசு இறுதிச் சடங்குகளை நடத்தும் ஈரான்!

ஈரானின் உயர்மட்டத் தலைவரான ஆயத்துல்லா அலி காமெனியின் மறைவைத் தொடர்ந்து, அவருக்கான மூன்று நாள் அரசு இறுதிச் சடங்குகளை நடத்த ஈரான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் தெஹ்ரான், கோம் மற்றும் மஷாத் ஆகிய முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளன.
தெஹ்ரானில் நடைபெறவுள்ள பிரதான ஊர்வலம் குறைந்தது 24 மணிநேரம் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, இதில் சுமார் 20 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.




