மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்வரை யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு இணங்கப் போவதில்லை - ஈரான்!

நாட்டு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்வரை யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு இணங்கப் போவதில்லை என்று ஈரான் கூறியிருக்கிறது.
தினமும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்குமுன் ஈரான் முன்வைத்த அமைதி யோசனையில் சில கடுமையான அம்சங்களைச் சேர்த்துத் திருப்பி அனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்தது.
அதேவேளை, அமெரிக்கா கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து சந்தேகமாக இருப்பதாக ஈரானியத் தலைமை சமரசப் பேச்சாளர் முகம்மது கலிபாஃப் (Mohammad Ghalibaf) தெரிவித்தார்.
இதற்குமுன் அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் (Donald trump), அணுவாயுதத் திட்டத்தை ஈரான் கைவிடுவதும், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதும் உடன்பாட்டுக்கு அடிப்படையான சிவப்புக் கோடுகள் என்றார்.




