SuperTopAds

காசாவின்100 வீதமாப பகுதியும் பலஸ்தீனியர்களுக்கே உரித்தானது - ஐ.நா!

ஆசிரியர் - Editor IV
காசாவின்100 வீதமாப பகுதியும் பலஸ்தீனியர்களுக்கே உரித்தானது - ஐ.நா!

காசா பகுதியின் சுமார் 70வீதமான பகுதியில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தும் நோக்கம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்த கூற்று தொடர்பில் பதிலளித்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் ஊடகப் பேச்சாளர் ஸ்டெபான் டுஜாரிக், காசாவின் 100% ஆன பகுதியும் பலஸ்தீனிய மக்களுக்குச் சொந்தமானது என குறிப்பிட்டுள்ளர்.

"இடைநிலை மண்டலம்" என அழைக்கப்படும் பகுதியின் மீதான தனது ஆக்கிரமிப்பை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்துகிறது."

"ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிலைப்பாடு தொடரும் என்பதோடு, வரையப்பட்ட மஞ்சள் கோடானது காசாவின் சட்டபூர்வ பிரிப்பைக் குறிக்கவில்லை என்பதோடு, முழு காசாவும் பலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது.

Radio