வெசாக் தினத்தில் 61 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள 61 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அவர்கள் வெசாக் தினமான இன்றைய தினம் சிறைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.




