SuperTopAds

ஈரான் தேசத்தைப் பிரிக்க அமெரிக்கா சதி - ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Editor IV
ஈரான் தேசத்தைப் பிரிக்க அமெரிக்கா சதி - ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குற்றச்சாட்டு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடரும் நிலையில், ஈரானுக்குள் உள்நாட்டுக் கலவரத்தையும் பிரிவினையையும் தூண்டிவிட அமெரிக்காவும் இஸ்ரேலும் சதி செய்வதாக ஈரானின் புதிய உச்ச தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக போர்க் களத்தில் ஈரானை முழுமையாக வீழ்த்த முடியாமல் தவித்த அமெரிக்காவும் இஸ்ரேலும், தங்களின் 'ராணுவத் தோல்விகளை' ஈடுகட்டவே ஈரானுக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கமேனி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்."எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்தப் போர், மாபெரும் பொருளாதார நெருக்கடிகள், மற்றும் அரசியல் ரீதியான முற்றுகைகளுக்குப் பிறகு, ஈரானிய தேசத்தை மண்டியிட வைப்பதற்காக எதிரிகள் தீட்டியுள்ள 'குருட்டுத் திட்டம்' இதுதான்; அதுவே ஈரானுக்குள் பிரிவினையையும் சிதைவையும் ஏற்படுத்துவது என்று அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

இதேநேரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இத்தகைய உளவியல் மற்றும் பிரிவினைவாதத் தாக்குதல்களை முறியடிக்க, ஈரானிய மக்கள் அனைவரும் எவ்வித வேறுபாடுகளுமின்றி 'தேசிய ஒற்றுமையுடனும்', ஒருங்கிணைப்புடனும் செயல்பட வேண்டும் என்று அவர் நாட்டு மக்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்

Radio