அமெரிக்கா சென்றடைந்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்!

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் இன்று(29.05.2026) அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சி.க்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அங்கு அவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோவை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாட்டு அமைச்சர்களும் "இருதரப்பு உறவுகள் குறித்து மறு ஆய்வு செய்யவுள்ளனர்.
பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இரு நாடுகளின் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவுள்ளனர்" என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.




