SuperTopAds

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: வர்த்தகர் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: வர்த்தகர் உயிரிழப்பு

களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகரை இலக்கு வைத்து, காரில் வந்த நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வர்த்தகர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்

Radio