வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக அதிகரிப்பு!

ஆசிரியர் - Admin
வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக அதிகரிப்பு!

குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வழமையான வெப்பநிலையை விட 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 2.4 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக உடலில் நீர்சத்து குறையும் அபாயம் உள்ளதால் சிறுவர் முதல் பெரியவர் வரை இயலுமானரை நீர் ஆகாரங்களை உட்கொள்ளுமாறும் தொழில் புரியும் இடங்களிலும் நிழல் தரும் இடங்களில் இழைப்பாறிக் கொள்ளுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் அதிகரிக்கும் வெப்பநிலையின் காரணமாக சரும நோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சருமத்தில் மாற்றங்கள் ஏதேனும் தென்படின் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வறட்சியால் 17 மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் புத்தளம் பொலன்னஞவை அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நீர் தாங்கிகள் மூலம் சுத்தமான குடி நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு