SuperTopAds

எரிபொருள் விலையேற்றத்தால் அலறும் டிரம்ப் - ஈரான் கடற்படை அதிரடி! அமெரிக்கா - ஈரான் இடையே கத்தார்

ஆசிரியர் - Editor IV
எரிபொருள் விலையேற்றத்தால் அலறும் டிரம்ப் - ஈரான் கடற்படை அதிரடி! அமெரிக்கா - ஈரான் இடையே கத்தார்

 தலைநகர் தோஹாவில் 60 நாள் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள வேளையில், IRGC கடற்படையின் மிக முக்கிய தளபதி ஒருவர் வாஷிங்டனை இகழும் வகையில் அதிரடியான புவிசார் அரசியல் உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார்.

ஐஆர்ஜிசி கடற்படையின் அரசியல் துணைத் தலைவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள பிரத்தியேக அறிக்கையில், "இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராக பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மேற்கொண்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் கடல்சார் முற்றுகைகளின் எதிர்விளைவுகள் தற்போது அமெரிக்காவின் சொந்தப் பொருளாதாரத்தையே உலுக்கத் தொடங்கியுள்ளன.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் தாறுமாறாக உயர்ந்ததோடு, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கைப்பாவை கூட்டாளி நாடுகளும் எங்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் பலத்தைக் கண்டு நடுங்கிப் போயுள்ளன.

இதன் காரணமாகவே, தங்களின் தற்காப்புக்காக எங்களின் ஹோர்மோஸ்கான் வான் எல்லையில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் எங்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு தற்காலிக உடன்பாட்டைக் காண வாஷிங்டன் இராஜதந்திர ரீதியாக எங்களிடம் ‘கெஞ்சி’ வருகிறது.

அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்க சகாப்தம் முடிந்துவிட்டது என்பதை அவர்களின் இந்த இக்கட்டான நிலையே உணர்த்துகிறது என மிகக் கெத்தாகப் பிரகடனம் செய்துள்ளார்.

Radio