பாதுகாப்பு அமைச்சுடன் இஸ்ரேல் பிரதமர் அவசரக் கூட்டம்!

திரைக்குப் பின்னால் அமெரிக்கா - ஈரான் இடையே 60 நாள் அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தோஹாவில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தற்போதைய பரபரப்பான சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ஊழல் வழக்கு நீதிமன்ற சாட்சியத்தை "முக்கிய இராஜதந்திரக் கடமைகள்" இருப்பதாகக் கூறி பாதியிலேயே முடித்துக் கொண்டு டெல் அவிவ் விரைந்துள்ளார்.
கிர்யா ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தில், பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் கடந்த வாரம் IDF தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் ஆகியோரைச் சந்தித்து அவசரப் பாதுகாப்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் ஹஜ் எச்சரிக்கை, லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஃபைபர் ஆப்டிக் வழிகாட்டுதல் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்வது மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில் இஸ்ரேல் தனது ராணுவ மேலாதிக்கத்தைத் தக்கவைப்பது எப்படி என்பது குறித்து இந்த உயர் மட்டக் கூட்டத்தில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.




